பரீட்சார்த்திகளுக்கான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள்
தண்டனைகள்
பரீட்சாார்த்தி ஒருவர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் தீர்மானத்துக்கு அமைய கீழ்க் குறிப்பிடப்படும் தண்டனைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்:
I. விசாரணக்கு உட்படுத்தப்படுகின்ற முழுப் பரீட்சைக்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு தோற்றுவதற்குத் தடை விதித்தல்
II. விசாரணக்கு உட்படுத்தப்படும் பரீட்சையின் ஒரு பாடத்திற்கு அல்லது மொத்தப் பரீட்சைக்கும் தகுதியற்றவர் ஆக்குதல்
III. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் நடாத்தப்படுகின்ற அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்கு வாழ்நாள் தடை விதித்தல்
IV. குறிப்பிட்ட காலப் பகுதிக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சைகளில் தோற்றுவதற்குத் தடை விதித்தல்
V. இடைநிறுத்தப்பட்ட, பரீட்சைக்கான தடை உடன் கடிதம் ஒன்றை வழங்குதல்
VI. குறிப்பிட்ட காலப் பகுதிக்கு சான்றிதழ் தடை செய்யப்படல்
VII. பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக பரீட்சார்த்தியை காவற்றுறையிடம் ஒப்படைத்தல் அல்லது அக்குறித்த செயற்பாடு தொடர்பாக காவற்றுறையில் புகார் செய்தல்
VIII. பரீட்சார்த்தி அரசாங்க ஊழியராக அமையும் சந்தர்ப்பத்தில் குறித்த பரீட்சார்த்தியின் செயற்பாடு தொடர்பாக (ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக) குறித்த பரீட்சார்த்தியின் நியமன அதிகாரிக்கு அறிவித்தல்
விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள்
சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை மண்டபத்தினுள் மற்றும் பரீட்சை நடைபெறும் வளாகத்தினுள் பரீட்சை மேற்பார்வையாளருக்கு அவரது பணிக் குழாமுக்கு, அதே போன்று ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு அல்லது தடங்கல்கள் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். பரீட்சார்த்திகள் பரீட்சை வளாகத்தின் சொத்துகளுக்கு அல்லது பரீட்சை ஊழியர்களின் தனிப்பட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் கூடாது.
பரீட்சார்த்திகள் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப் பகுதியிலும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்பும் அதே போன்று பரீட்சை நடைபெற்று முடிவடைந்தவுடனும் பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அவரது பணிக் குழுவின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளல் வேண்டும்.
பரீட்சையின் போது வினாப்பத்திரத்திற்கு விடையளிப்பது ஆரம்பிக்கப்பட்டு அரை மணித்தியாலம் கழிந்த பின்னர் எந்தவொரு பரீட்சார்த்தியும் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பரீட்சை முடிவடையும் வரை எந்தவொரு பரீட்சார்த்தியும் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளிய செல்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. செயன்முறைப் பரீட்சைகள் அல்லது வாய்மொழி மூலமான பரீட்சைகளுக்கு உரிய நேரத்திற்கு சமுகம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
சகல பரீட்சார்த்திகளும் தமது சுட்டெண்ணுக்குரிய ஆசனம் தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் அமர்தல் கூடாது. பரீட்சை மேற்பார்வையாளரின் விசேட அனுமதி இன்றி தன்னுடைய இடத்தை மாற்றக் கூடாது. தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தைத் தவிர வேறு இடத்தில் அமர்தல் மோசடி நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகக் கருதப்பட நேரிடும்.
பரீட்சை மண்டபத்தில் பூரண அமைதி பேணப்பட வேண்டும். எக் காரணம் கொண்டும் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சை மேற்பார்வை பணிக்குழுவில் உள்ள ஒருவரைத் தவிர பரீட்சை மண்டபத்தினுள் அல்லது வெளிய இருக்கும் எவர் ஒருவருடனும் எந்தவித காரணத்திற்காகவும் கதைத்தல் அல்லது தகவல் பரிமாறல் அல்லது வேறு எந்தவிதமான கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை சுட்டெண் மட்டும் கொண்ட பரீட்சார்த்தியின் விடைத்தாள்கள் இனங்காணப்படுகின்றமையால் விடைத்தாளில் தன்னுடைய பெயரை எழுதுதல், விடைத்தாளை இனங்கண்டு கொள்ளக்கூடிய வகையில் ஏதேனும் குறியீடு அல்லது குறிப்பு இடுதல், விடைத்தாளில் அநாகரிகமான அல்லது அவசியமற்ற விடயங்களை எழுதுதல், விடைத்தாளுடன் நாணயத்தாள்களை இணைத்தல் ஆகியவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் வேறு எவரேனும் பரீட்சார்த்தியின் சுட்டெண் தன்னுடைய விடைத்தாளில் எழுதுதலும் மோசடி நடவடிக்கை ஒன்றைச் செய்வதற்கு முயன்றதாகக் கருதப்படும். இனங்கண்டு கொள்ள முடியாத வகையில் சுட்டெண் எழுதப்பட்ட விடைத்தாள்களும் நிரகரிக்கப்படும்.
உமக்கு பரீட்சை மண்டபத்தினுள் வழங்கப்படும் தாள்கள் (பரீட்சை நடைபெறும் திகதிக்குரிய நோக்குனரின் குறுகிய கையொப்பம் மற்றும் திகதி இடப்பட்ட விடை எழுதும் தாள்கள்) தவிர வினாத்தாளிலோ அல்லது மசையிலோ அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ எவற்றையும் எழுதுதல் கூடாது. இந்த அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயற்படுதல் மோசடி நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகக் கருதப்படும்.
பரீட்சார்த்திக்கு வழங்கப்படுகின்ற தாள்களை அல்லது விடை எழுதும் புத்தகத்தை கிழித்தல் அல்லது கசக்குதல் கூடாது. பரும்படி வலைகளை செய்து பார்ப்பதற்காக உபயோகிக்கும் சகல தாள்களையும் தெளிவாக குறுக்காக கோடிட்டு விடைத்தாளுடன் இணைத்தல் அல்லது விடைத்தாளுடன் கையளித்தல் அல்லது வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலின் படி செய்தல் வேண்டும். பரீட்சை மண்டபத்தில் எழுதப்பட்ட எதனையும் வெளிய கொண்டு செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே வினாவிற்கான விடை இரு இடங்களில் எழுதப்பட்டிருப்பின் அவசியமற்ற விடையைத் தெளிவாக விட்டி விட வேண்டும்.
பரீட்சையின் போது விடையளிப்பதற்காக உமக்கு வழங்கப்படுகின்ற தாள்கள் மற்றும் வேறு பொருட்களை பரீட்சை மண்டபத்திற்கு வெளிய கொண்டு செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அனைத்துப் பொருட்களும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு சொந்தமானதுடன் இவ் விதியின் மீறுதல் ஒரு தண்டனைக்குரிய செயற்பாடாகக் கருதப்படும்.
பரீட்சையின் போது விடையளிப்பதற்காக தனக்கு வழங்கப்படுகின்ற காகிதாதிகள் ஒவ்வொரு பரீட்சையின் போதும் தனதருகே வைத்துக் கொள்ளக்கூடிய எழுத்து மூலமான அனுமதியுள்ள பொருட்கள் தவிர்ந்த ஏனைய குறிப்புப் புத்தகங்கள், குறிப்புகள் உள்ளடங்கிய தாள்கள் அல்லது கடதாசித்துண்டுகள் போன்றவை பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சைக்குத் தோற்றும் சந்தர்ப்பத்தில் தன் வசம் அல்லது அருகே வைத்திருத்தல் கூடாது. அது போன்ற பரீட்சை மண்டபத்தினுள் கைகடகத் தொலைபேசி, இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள்/கருவிகள் (Electronic Communication Instruments/Devices) தன் வசம் அல்லது அருகே வைத்திருத்தல் மற்றும் அந்த சாதனங்கள்/கருவிகளை உபயோகித்து வெளி நபர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் பரீட்சை நடைபெறும் போது வேறு நபர்களுக்கு மற்றும் சமூக ஊடகங்களுக்கு தகவல் அனுப்புதல் மோசடிச் செயற்பாடு என்பதுடன் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள்/கருவிகள் மேற்குறிப்பிட்ட 10ஆவது பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக உபயோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அச் சாதனங்கள்/கருவிகள் உரிய விசாரண நடவடிக்கைகள் முடிவடையும் வரை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் வசம் எடுக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பரீட்சை மண்டபத்தில் அமர்ந்த பின்னர், பரீட்சைக்கு முன் அல்லது பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு பரீட்சார்த்தியும் தன் அருகே பரீட்சைக்காக கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படாத எந்தவொரு பொருளையும் அல்லது உபகரணத்தையும் வைத்திருத்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அவரது பணிக் குழாம் கட்டளையிட்டால் சகல பரீட்சார்த்திகளும் தன் வசம் உள்ளவற்றை வெளிப்படுத்துவதற்கும் மற்றும் பரிசோதிப்பதற்கும் கட்டுப்படுவதுடன் இவ்வாறான தேவைப்பாட்டினை மீறுவது மோசடியான செயற்பாட்டைச் செய்வதற்கு முயற்சித்ததாகக் கருதப்படும்.
எவரேனும் ஒரு பரீட்சார்த்தி வேறு ஒரு பரீட்சார்த்தியின் விடைத்தாளிலிருந்து அல்லது புத்தகத்திலிருந்து அல்லது தாளிலிருந்து அல்லது குறிப்பெழுதிய தாள்களிலிருந்து அல்லது சமிக்ஞைகள் மூலம் அல்லது வேறு ஏதேனும் ஒன்றிலிருந்து பார்த்து எழுதுதல் அல்லது பார்த்து எழுத முயற்சித்தல் அல்லது மோசடியாக நடந்து கொள்ளல் என்பன குற்றமாகும். வேறு பரீட்சார்த்திக்கு உதவி செய்தல், வேறு பரீட்சார்த்தியிடமிருந்து அல்லது நபரிடமிருந்து அல்லது பரீட்சை பணிக் குழுவினரிடமிருந்து உதவி பெறுதல் குற்றம் என்பதுடன் விடையளித்து முடிந்த சகல தாள்களையும் எழுதிக் கொண்டிருக்கும் தாளுக்குக் கீழ வைத்து விடையளித்தல் வேண்டும். எழுதுகின்ற தாள்களை மசையின் மேல் பரப்பி வைத்திருத்தல் கூடாது.
பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு வினாத்தாளுக்கு விடையளிக்கும் போது எக்காரணம் கொண்டும் குறுகிய நேரத்திற்குக் கூட பரீட்சை மண்டபத்திலிருந்து வெளிய செல்வதற்கு எந்தவொரு பரீட்சார்த்திக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. எனினும், ஒரு பரீட்சார்த்திக்கு மலசலகூடத்திற்கு செல்வதற்காக பரீட்சை மண்டபத்திலிருந்து வெளிய செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பரீட்சை மேற்பார்வையாளரின் உதவி பணிக் குழுவின் உத்தியோகத்தர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சார்த்திக்கு சிறிது நேரம் வெளிய செல்வதற்கு அனுமதிக்கப்படுவார். அவ்வாறு வெளிய செல்லும் முன்பும், மீண்டும் பரீட்சை மண்டபத்திற்குள் வரும் போதும் அவர் சோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
பரீட்சை மண்டபத்தில் விடையளிக்கத் தொடங்குவதற்கு முன் அல்லது பின் உரிய பரீட்சார்த்திக்குப் பதிலாக போலிப் பரீட்சார்த்தி ஒருவர் தோற்றுதல் தண்டனைக்கு உள்ளாகக்கூடிய செயற்பாடாகும். ஆளடையாள அட்டையை மாற்றுதல் அல்லது போலி அடையாள அட்டையைச் சமர்ப்பித்தல் ஒரு மோசடிச் செயற்பாடாகக் கருதப்படும்.
பரீட்சார்த்தி ஒருவர் அல்லது பரீட்சார்த்தி அல்லாத ஒருவர் எந்தவொரு பரீட்சார்த்திக்கும் தவறான முறையில், மோசடி செய்யும் வகையில் உதவி செய்தல் ஒரு பாரிய குற்றமாக கருதப்படும்.
பரீட்சார்த்திகளுக்கான விதிகளும் அறிவுறுத்தல்களும்
(i) சகல பரீட்சார்த்திகளும் தனது அனுமதிப்பத்திரத்தில் கையொப்பத்தினை உறுதி செய்து கொள்வதும், விண்ணப்பிக்கப்பட்ட பாடங்கள் மற்றும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கிடையில் பொருந்தாத தன்மை காணப்படின் பரீட்சைத் திணைக்களத்தில் விசாரித்து பரீட்சைக்கு முன் அதைத் திருத்திக் கொள்வதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ii) பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை (1/2) மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சை மண்டபத்திற்கு சமுகமளித்தல் உசிதமானது என்பதுடன், பரீட்சை மண்டபம் நிச்சயமாகத் தெரியாதவிடத்து பரீட்சை ஆரம்பிக்கும் தினத்திற்கு முன்னரே அது குறித்து விசாரித்து பரீட்சை மண்டபத்தை சரியாக இனங்காணல் சிறந்தது.
(iii) பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்தி ஒவ்வொரு பாடங்களுக்குத் தோற்றும் போதும் தனது ஆள் அடையாள அட்டையை வழங்கி தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
(a) ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை பரீட்சை மண்டபத்தில் சமர்ப்பிக்காவிடின், பரீட்சார்த்தியாய் இருத்தல் இரத்துச் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், ஏதேனும் காரணத்தால் அதற்குத் தேவையான ஆவணங்களை பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு வர மறந்திருப்பின் அதனை பற்றி பரீட்சை மேற்பார்வையாளருக்கு அறிவித்து பரீட்சை முடிவடைவதற்கு முன்னர் அவற்றைச் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
(b) சகல பரீட்சார்த்திகளும் தனது ஆள் அடையாளம் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில், முழு முகத்தையும் நன்றாக அடையாளம் காணக்கூடிய வகையில் பரீட்சை நடைபெறும் கால எல்லையில் பரீட்சை மண்டபத்தில் இருக்க வேண்டும்.
(iv) பரீட்சார்த்தி புளூடூத் (Bluetooth) போன்ற இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள்/கருவிகளை (Electronic Communication Devices) உபயோகிக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்வதற்காக பரீட்சை மண்டபத்தில் தனது இரு காதுகளையும் தெளிவாகத் தெரியும் வகையில் வைத்திருத்தல் வேண்டும்.
(v) பரீட்சை மண்டபத்தில் உமக்கு வழங்கப்படுகின்ற தாள்களை விட்டு வேறு எவ்வித கடதாசிகளையும் விடையளிப்பதற்கு உபயோகிக்கக் கூடாது. எஞ்சிய கடதாசிகளை மற்றும் வேறு பொருட்களை அசுத்தப்படுத்தாது மீண்டும் உபயோகிக்கக்கூடிய வகையில் உமது மசையின் மேல் வைக்க வேண்டும்.
(vi) பரீட்சார்த்திகள் தங்களது பனா, பென்சில், அழிறப்பர், அடிமட்டம், கேத்திரகணித உபகரணங்கள், வர்ணப் பென்சில் பெட்டி, வர்ண சோக் பெட்டி போன்றவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்.
(vii) நீங்கள் உபயோகிக்கும் விடையளிக்கும் புத்தகம் மற்றும் சகல தாள்களிலும் விடையழுத தொடங்கும் போது உடனடியாக சுட்டெண்ணத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விடைத்தாள்களின் இருபுறமும் தெளிவாக, சுத்தமாக விடையழுத வேண்டும். வினாவொன்றின் ஒரு பகுதிக்கு விடையழுதிய பின் அவ் வினாவின் மற்றைய பகுதியை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு வரியையாவது வெறுமையாக விடுதல் வேண்டும். ஒவ்வொரு வினாக்களுக்குமான விடையினை புதிய பக்கத்தில் ஆரம்பித்தல் வேண்டும்.
(viii) விடையளிக்கும் தாளின் இடதுபுற விளிம்புக்கோடு காணப்படுவது வினாக்களின் இலக்கங்களை எழுவதற்காகும். வலதுபுற விளிம்புக்கோடு ஒதுக்கப்பட்டிருப்பது மதிப்பிடுபவரின் உபயோகத்திற்காகும். அதனால் அவற்றில் எதுவும் எழுதுதலாகாது. உம்மால் விடையளிக்கப்பட்ட வினாக்களின் இலக்கங்களைப் பிழையாக இடுவது குழப்பத்திற்குக் காரணமாக அமையும் என்பதனால் வினா இலக்கத்தைச் சரியாக எழுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ix) கணித வினாக்களுக்கு விடையளிக்கும் போது கணக்குச் செய்முறைகள் பார்த்த மற்றும் பரும்படி வலைகள் அந்தந்த ஒழுங்கில் கணக்கிற்கான விடையைக் கண்டு பிடித்ததன் ஒரு பகுதியாகக் காட்டப்பட வேண்டும். அவசியமான இடங்களில் வரையப்படும் வரிப்படங்கள் மற்றும் படங்கள் சரியானவையாகவும் குறிப்பிடத்தக்க அளவு பெரிதானதாகவும் இருத்தல் வேண்டும்.
(x) கட்டாயமான வினா மற்றும் தெரிவு செய்யப்பட வேண்டிய ஏனைய வினாக்கள் தொடர்பாக வினாப்பத்திரத்தில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசித்தல் வேண்டும். வினாப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விடையளிக்கப்படாத சந்தர்ப்பங்களில் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
(xi) ஒவ்வொரு வினாவிற்கும் விடையளித்து முடிந்த பின் விடையளித்த புத்தகத்திற்கு மேலதிகமாக எழுதிய தாள்களை பக்க இலக்கங்களின் ஒழுங்கில் இணைத்து இடதுபுற மேல்மூலையில் கழறாத வகையில் கட்டுதல்/இணைத்தல் வேண்டும். விடைப்பத்திரத்தைக் கையளிக்கும் முன் சகல விடைத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விடைப்பத்திரத்தைக் கையளித்த பின் பரீட்சை மண்டபத்திற்கு வெளிய கொண்டு செல்லப்பட்ட எந்தவொரு விடை எழுதிய தாளும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட மாட்டாது.
(xii) உங்கள் விடைத்தாளை பரீட்சை மேற்பார்வையாளரிடம் அல்லது பணிக் குழுவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் கையளித்தல் வேண்டும். விடைப்பத்திரங்களை சேகரிக்கும் வரை உங்களது ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தவறுவதானது, சிலவேளை உமது விடைப்பத்திரம் காணாமல் போவதற்கும் நீர் ஏதாவது பாடத்திற்கு சமுகமளிக்கவில்லை என்று கருதுவதற்கும் காரணமாக அமையும்.
(xiii) ஏதாவது காரணத்துக்காக பரீட்சை மேற்பார்வையாளருடன் அல்லது பணிக் குழுவின் உத்தியோகத்தர் ஒருவருடன் கதைக்க வேண்டிய அவசியம் ஏற்படின், ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மசையில் இருமுறை தட்டுவதன் மூலம் சமிக்ஞை செய்தல் வேண்டும்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை.
No comments:
Post a Comment