Breaking

Search This Blog

06/05/2020

Interview with Secretary of Education Ministry on reopening school

Interview with Secretary of Education Ministry on reopening school

Special interview with secretary of education ministry has been published on todays dinamina news paper. Secretary says it would be 7 day school from 8 am to 3.00 pm. No any Exact date of school reopening yet. 
Tamil Translation available at the end.

கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். எம். சித்ரானந்த உடனான நேர்காணல்.


ஏற்கனவே கூறப்பட்டது போல் மே 11 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?
மே 11 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட் இருந்த போதிலும் கூட தற்போதைய நிலைமைகளின் படி அது இன்னும் தாமதமாகும் நிலை உண்டு. சுகாதார துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாணவர்களுக்கு நோய் பரவக் கூடிய ஆபத்து குறைந்தவுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்


நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 25 – 35 அளவில் உள்ளனர். கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி அவசியமாகும். அதிக மாணவர் எண்ணிக்கையுடன் இந்த அறிவுறுத்தல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? guruwaraya.lk

கிராமப் புற பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளி பேணுவது இலகுவானது. எனினும் நகர்ப்புறங்களில் நிலைமை வேறு. அதனால் நாம் மாற்று நடவடிக்கைகள் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.
 guruwaraya.lk
முதலில் உயர்தரம், சாதாரண தரம், புலைமைப் பரிசில் போன்ற பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கப்படும். அவர்களும் ஒரே தடவையில் பாடசாலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள். குழுக்களாக பிரித்து, தினங்கள் ஒதுக்கப்பட்டு அழைக்கப்படுவார்கள். முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை ஏழு நாட்களும் வகுப்புகள் நடாத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளுக்கான பாட நேர அட்டவணை முழுமையாக மாறும். ஒரு ஆசிரியர் 7 நாட்களும் பாடசாலை வரவேண்டிய அவசியம் இல்லை.  guruwaraya.lk
நாட்கள் பிரித்தொதுக்கப்பட்டு வருகை தர வேண்டி ஏற்படும். அதிபர்கள் தமது ஆசிரியர் குழாத்துடன் சுமுக முறையில் கலந்துரையாடி கால அட்டவணைகள் தயாரிக்கப்படல் வேண்டும். பின்னர் பரீட்சை முகங்கொடுக்காத தரம் 6,7,8 மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கப்படும். அதுவும் குழுக்களாக உள்வாங்கப்படுவர்.


சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாகும். அது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைள் என்ன?
43 இலட்ச மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவது என்பது, அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் எமது நாட்டுக்கு இலகுவான விடயம் அல்ல. எனவே நாம், மாணவர்களின் முகக்கவசங்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

         guruwaraya.lk

நிகழ்நிலை கற்பித்தல் இக்காலகட்டத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறதா?
அநேக பாடசாலைகளின் செயற்படுத்தப்படுகின்றது. WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இணைய வசதி அற்ற பாடசாலைகள் மற்றும் வீடுகள் கணினி, ஸ்மார் கையடக்கத் தொலைபேசி இல்லாத நிலைமைகள் உண்டு. 50 % மாணவர்களின் நிலைமை இதுவாகும். இம்மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அச்சு ஊடகம் போன்ற வசதிகள் இவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். 


இச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்களிடமிருந்து எவ்வாறான பங்களிப்பு கிடைக்கும்?
தாய், தந்தையர்கள் வேறுபட்ட கருத்துக்களை முன்வைப்பர். சிலர் பாடசாலை ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என கூறும் போது, இன்னும் சிலர் பாடசாலை ஆரம்பிப்பதை எதிர்க்கின்றனர். ஏன் இராணுவத்திற்கு பாடசாலைகள் வழங்கப்பட்டன போன்ற வேறுபட்ட பிரச்சினைகள். எனினும் இவ்வனைத்தையும் நாம் செய்வது பாடசாலை மாணவர்களுக்காகவாகும். பாரிய சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம். கூட்டங்கள் நடாத்த முடியாமையால் நாம், வலய கல்வி பணிப்பாளர்களை அழைத்து அனைத்து மாணாக்கருக்கும் நன்மைபயக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

     guruwaraya.lk

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை என்பவற்றை வெற்றிகரமாக நடாத்த முடியுமா? guruwaraya.lk
பரீட்சை நடாத்தப்படும் சந்தர்ப்பங்களில் வழமையாக மாணவர் இடைவெளி பேணப்படுவதால், பரீட்சைகள் நடாத்துவதில் பிரச்சினை இல்லை. 

நேர்காணல் : சம்பிக்கா தீபானி ரனசிங்க
மொழிபெயர்ப்பு : guruwaraya.lk 

Source : Dinamina (06.05.2020)



Popular

Recent

Ad

Learning Materials for Students