Breaking

Search This Blog

07/05/2020

Re Opening Universities : UGC
May 07, 2020

Re Opening Universities : UGC



විශ්ව විද්‍යාල විවෘත කිරීම පිළිබඳ දැන්වීම - විශ්ව විද්‍යාල කොමිෂන් සභාව
දෛනික මානව ක්‍රියාකාරකම් ක්‍රමයෙන් ආරම්භ කිරීම පිළිබඳ රජයේ උපදෙස් වලට අනුකූලව කොළඹ, ගම්පහා, කළුතර සහ පුත්තලම් දිස්ත්‍රික්කවල විශ්වවිද්‍යාල , උසස් අධ්‍යාපන ආයතන 2020.05.11 දින ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය පියවර ගන්නා බව විශ්ව විද්‍යාල ප්‍රතිපාදන කොමිෂන් සභාව විසින් කොළඹ, ගම්පහා, කළුතර සහ පුත්තලම් යන දිස්ත්‍රික්කවල විශ්වවිද්‍යාල උපකුලපතිවරුන්ට ප්‍රකාශ කර ඇත. සේවකයින්ට නැවත සේවයට පැමිණීමට සුදුසු පියවර ගන්නා ලෙසත් අධ්‍යාපන කටයුතු ආරම්භ කරන දිනය රජය විසින් ප්‍රකාශයට පත් කරන බව මෙම නිවේදනය නිකුත් කරන ලදී.


பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் தொடர்பான அறிவிப்பு 
–பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அன்றாட மனித நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பிப்பது தெடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, அம்மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை எதிர்வரும் 11.05.2020 முதல் இயங்கச் செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி சார் ஊழியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை மீண்டும் வேலைக்கு திரும்பும் நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தலைவர்கள் பொருத்தாமன பொறிமுறையை கையாளுமாறும் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக கல்விசார் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எனவும் அவ்வறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click Below for the Details from UGC
Letter 
Media Releases

E Learning Programme for students : Nutrition and wellness
May 07, 2020

E Learning Programme for students : Nutrition and wellness



ශ්‍රී ලංකාවේ පාසල් ළමුන් මිලියන 4.5 කට ආසන්න සංඛ්‍යාවක් සිටින අතර, විද්‍යුත් ඉගෙනුම් විශේෂ නව වැදගත්කමක් ලබා ගෙන ඇත. මෙම කාලය තුළ පෝෂණය, සෞඛ්‍යය, ආහාර සුරක්‍ෂිතතාවය සහ සනීපාරක්ෂාව පිළිබඳව තම දරුවන්ට ඉගැන්වීමට දෙමාපියන්ට උපකාර කිරීම සඳහා අධ්‍යාපන අමාත්‍යාංශය සහ නෙස්ලේ විසින් දිගු කලක් තිස්සේ ක්‍රියාත්මක වන නෙස්ලේ හෙල්දි කිඩ්ස් වැඩසටහනේ විද්‍යුත් ඉගෙනුම් සංස්කරණයක් දියත් කර තිබේ. රජයේ පාසල්වල විෂය බාහිර විෂයයක් ලෙස   උගන්වනු ලබන මෙම වැඩසටහන පාසල් ළමුන් අතර පෝෂණය හා සෞඛ්‍ය සම්පන්න ජීවන රටාවක් පිළිබඳව දැනුවත් කිරීම අරමුණු කරයි. එය සත්කාරකත්වය දරනු ලබන ශ්‍රී ලංකාවේ පළමු නිල ‘පෝෂණය හා සුවතාවය’ (පොෂනායි සුවඩිවියායි) ඉ-ඉගෙනුම් වැඩසටහනයි.

ඉ-ඉගෙනුම් වැඩසටහන නවීන, අන්තර්ක්‍රියාකාරී ඉගෙනුම් ශෛලියකින් සමන්විත වන අතර, පාසැල් විෂය මාලාවට සහාය වීම සඳහා අන්තර්ගතය ආකර්ශනය කර ඇත. එය මොඩියුල හයකින් සමන්විත වන අතර, එක් එක් අවසානයේ තක්සේරුවක් ඇති අතර එය භාෂා තුනෙන්ම ලබාගත හැකිය. 60% ට වඩා ලකුණු ලබා ගත් අයට අධ්‍යාපන අමාත්‍යාංශයෙන් නිල සහතිකයක් ලැබෙනු ඇත.
  1. ආහාර හා පෝෂ්‍ය පදාර්ථ
  2. පෝෂණය හා සම්බන්ධ සෞඛ්‍ය ගැටළු
  3. ආහාරවල සුරක්ෂිතතාවය හා සනීපාරක්ෂාව
  4. වැරදි ආහාර පුරුදු හා ක්‍රියාකාරකම්ආ
  5. හාර සැකසිමේ දි සිදුවන පෝෂණ හානි
  6. ඔබේ පෝෂණ තත්ත්වය හඳුනා ගන්න

Source : Daily News 07.05.2020

Click Below for Elearning Programme

தற்போதைய சூழ்நிலையில் 4.5 மில்லியன் பாடாசலை மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்நிலை கற்றலானது முக்கிய இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், போசணை, ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு என்பவற்றை பெற்றோர்கள் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ள கல்வி அமைச்சு மற்றும் நெஸ்லே நிறுவனம் இணைந்து நிகழ்நிலை கற்றல் வள மூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது.


மாணவர்களிடத்தில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை விருத்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இம்முறைமை இலங்கை பாடசாலைகளில் மேலதிக பாடவிதானத்துடன் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. 

6 அத்தியாயங்களின் கீழ் மதிப்பிடப்படும் இந்த பயிற்சியின் இறுதியில், 60 % க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மாணாக்கருக்கு கல்வி அமைச்சின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  1. உணவும் போஷாக்கும்
  2. போஷாக்கு தொடர்பான தேக ஆரோக்கிய விளைவுகள் 
  3. உணவுப் பாதுகாப்பும் சுகாதாரமும் 
  4. தவறான உணவுப்பழக்க வழக்கங்கள் 
  5. உணவுப் பதப்படுத்தலினால் ஏற்படும் சத்து இழப்புக்கள் 
  6. உங்களின் போஷாக்கு நிலையை அறிந்து கொள்ளல்
நிகழ்நிலை கற்றல் மூலத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும் 


06/05/2020

Interview with Secretary of Education Ministry on reopening school
May 06, 2020

Interview with Secretary of Education Ministry on reopening school

Special interview with secretary of education ministry has been published on todays dinamina news paper. Secretary says it would be 7 day school from 8 am to 3.00 pm. No any Exact date of school reopening yet. 
Tamil Translation available at the end.

கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். எம். சித்ரானந்த உடனான நேர்காணல்.


ஏற்கனவே கூறப்பட்டது போல் மே 11 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?
மே 11 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட் இருந்த போதிலும் கூட தற்போதைய நிலைமைகளின் படி அது இன்னும் தாமதமாகும் நிலை உண்டு. சுகாதார துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாணவர்களுக்கு நோய் பரவக் கூடிய ஆபத்து குறைந்தவுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்


நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 25 – 35 அளவில் உள்ளனர். கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி அவசியமாகும். அதிக மாணவர் எண்ணிக்கையுடன் இந்த அறிவுறுத்தல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? guruwaraya.lk

கிராமப் புற பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளி பேணுவது இலகுவானது. எனினும் நகர்ப்புறங்களில் நிலைமை வேறு. அதனால் நாம் மாற்று நடவடிக்கைகள் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.
 guruwaraya.lk
முதலில் உயர்தரம், சாதாரண தரம், புலைமைப் பரிசில் போன்ற பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கப்படும். அவர்களும் ஒரே தடவையில் பாடசாலைக்கு அழைக்கப்பட மாட்டார்கள். குழுக்களாக பிரித்து, தினங்கள் ஒதுக்கப்பட்டு அழைக்கப்படுவார்கள். முற்பகல் 8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை ஏழு நாட்களும் வகுப்புகள் நடாத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளுக்கான பாட நேர அட்டவணை முழுமையாக மாறும். ஒரு ஆசிரியர் 7 நாட்களும் பாடசாலை வரவேண்டிய அவசியம் இல்லை.  guruwaraya.lk
நாட்கள் பிரித்தொதுக்கப்பட்டு வருகை தர வேண்டி ஏற்படும். அதிபர்கள் தமது ஆசிரியர் குழாத்துடன் சுமுக முறையில் கலந்துரையாடி கால அட்டவணைகள் தயாரிக்கப்படல் வேண்டும். பின்னர் பரீட்சை முகங்கொடுக்காத தரம் 6,7,8 மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கப்படும். அதுவும் குழுக்களாக உள்வாங்கப்படுவர்.


சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயமாகும். அது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைள் என்ன?
43 இலட்ச மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவது என்பது, அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் எமது நாட்டுக்கு இலகுவான விடயம் அல்ல. எனவே நாம், மாணவர்களின் முகக்கவசங்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

         guruwaraya.lk

நிகழ்நிலை கற்பித்தல் இக்காலகட்டத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறதா?
அநேக பாடசாலைகளின் செயற்படுத்தப்படுகின்றது. WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இணைய வசதி அற்ற பாடசாலைகள் மற்றும் வீடுகள் கணினி, ஸ்மார் கையடக்கத் தொலைபேசி இல்லாத நிலைமைகள் உண்டு. 50 % மாணவர்களின் நிலைமை இதுவாகும். இம்மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அச்சு ஊடகம் போன்ற வசதிகள் இவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். 


இச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்களிடமிருந்து எவ்வாறான பங்களிப்பு கிடைக்கும்?
தாய், தந்தையர்கள் வேறுபட்ட கருத்துக்களை முன்வைப்பர். சிலர் பாடசாலை ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என கூறும் போது, இன்னும் சிலர் பாடசாலை ஆரம்பிப்பதை எதிர்க்கின்றனர். ஏன் இராணுவத்திற்கு பாடசாலைகள் வழங்கப்பட்டன போன்ற வேறுபட்ட பிரச்சினைகள். எனினும் இவ்வனைத்தையும் நாம் செய்வது பாடசாலை மாணவர்களுக்காகவாகும். பாரிய சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம். கூட்டங்கள் நடாத்த முடியாமையால் நாம், வலய கல்வி பணிப்பாளர்களை அழைத்து அனைத்து மாணாக்கருக்கும் நன்மைபயக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

     guruwaraya.lk

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை என்பவற்றை வெற்றிகரமாக நடாத்த முடியுமா? guruwaraya.lk
பரீட்சை நடாத்தப்படும் சந்தர்ப்பங்களில் வழமையாக மாணவர் இடைவெளி பேணப்படுவதால், பரீட்சைகள் நடாத்துவதில் பிரச்சினை இல்லை. 

நேர்காணல் : சம்பிக்கா தீபானி ரனசிங்க
மொழிபெயர்ப்பு : guruwaraya.lk 

Source : Dinamina (06.05.2020)



05/05/2020

Special Announcement : Duty Assuming Process of Newly  Appointed DO and SLICT officers
May 05, 2020

Special Announcement : Duty Assuming Process of Newly Appointed DO and SLICT officers


Special announcement has issued from ministry of public administration regarding the duty assuming process of Development Officers who have appointed on 01.01.2020 after the graduate training recruitment and officers who appointed as Grade 3 -II and 2-II of SLICT Services.


பட்டதாரி பயிற்சி ஆட்சேர்ப்பின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டு பிறகு 01.01.2020 அன்று நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் SLICT சேவைகளின் தரம் 3 -II மற்றும் 2-II ஆக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் கடமை ஏற்றுக்கொள்ளும் செயல்முறை குறித்து பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்.



Celebrating the State  Vesak Festival – 2020
May 05, 2020

Celebrating the State Vesak Festival – 2020



Circular
රාජ්‍ය වෙසක් උත්සවය
සැමරීම - 2020
Celebrating the State  
Vesak Festival – 2020
அரச வெசாக் பண்டிகை
கொண்டாட்டம்
Ministry of Home Affairs has issued a circular regarding the celebraation of State Vesak Festival. 07th and 08th of May has declared as Wesak Poya days. Wesak week declared from 04.05.2020 to 10.05.2020. During this week, Buddhist flag should be hoisted at all state buildings and decorated by Wesak lanterns.

அரச வெசாக் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. வருகின்ற மே மாதம் 07இ 08 வெசாக் போயா தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதனையொட்டி 04.05.2020 தொடக்கம் 10.05.2020 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அரச கட்டிடங்களில் பௌத்த கொடி ஏற்றப்படுவதுடன், வெசாக் விளக்குகளால் அலங்காரப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 




04/05/2020

2nd round of 5000 Direct to Home : PMD
May 04, 2020

2nd round of 5000 Direct to Home : PMD

5000 හි දෙවන වටය
කෙලින්ම ගෙදරට

2nd round of 5000 allowance 
Direct to Home

5000 ரூபாயின் 2 வது சுற்று

வீட்டிற்கு நேரடியாக
Second round of 5000 will be given directly to householders. Process starts 11.05.2020 and ends 15.05.2020

Important Message Regarding Current Curfew
May 04, 2020

Important Message Regarding Current Curfew

වත්මන් ඇඳිරි නීතිය පිළිබඳ වැදගත් පණිවිඩය
Important message regarding current curfew process
தற்போதைய ஊரடங்கு உத்தரவு செயல்முறை 
தொடர்பான முக்கியமான செய்தி

Government has issued a detail explanation regarding current curfew process



ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

மேலதிக விளக்கம்
01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

02.ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் முதல் ஆரம்பமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாட்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும்.

இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00மணிக்கு திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக அரச, தனியார் துறையில் தொழிலுக்காக செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

04.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும்.


05. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி எப்பிரதேசங்களுக்கு ஏற்புடையது? எப்போது முதல்?

  • ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்.
  • மே 11 திங்கள் முதல்
  • ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளை பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும், பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் பணிகள் இடம்பெறுவதுடன், வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.

மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.05.04

Source : News.lk













O/L Requirements for University Entrance
May 04, 2020

O/L Requirements for University Entrance

විශ්ව විද්‍යාල ප්‍රවේශය සඳහා
අ.පො.ස. සාමාන්‍ය පෙළ අවශ්‍යතා
பல்கலைக்கழக அனுமதிக்கான
சாதாரண தர தேவைப்பாடுகள்

GCE Ordinary Level results have been released. More students will follow the GCE Advanced Level studies with the aim of university entrance.

For some university courses, it is necessary to take minimum grades in certain subjects in the GCE Ordinary Level exam, beyond the GCE Advanced Level.This grades should be get before the closing date of the university admission.

Students have a chance to apply GCE O/L Exam again to get the required results, if they have not got during first attempt.

Click Below for the Courses and required Results


අ.පො.ස. සාමාන්‍ය මට්ටමේ ප්‍රතිපල නිකුත් කර ඇත. විශ්ව විද්‍යාල ප්‍රවේශය අරමුණු කරගනිමින් සිසුන් අ.පො.ස. උසස් පෙළ අධ්‍යයනය කරනු ඇත. සමහර විශ්ව විද්‍යාල පාඨමාලා සඳහා, අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගයේදී ඇතැම් විෂයයන් සඳහා අවම ප්‍රතිපල ලබා ගැනීම අවශ්‍ය වේ. මෙම ශ්‍රේණි විශ්ව විද්‍යාල ප්‍රවේශ අවසන් දිනයට පෙර ලබා ගත යුතුය.

පළමු උත්සාහයේදී නොලැබුනේ නම්, අවශ්‍ය ප්‍රතිපල ලබා ගැනීම සඳහා නැවත වරක් අ.පො.ස.සාමාන්‍ය පෙළ විභාගයට අයදුම් කිරීමට සිසුන්ට අවස්ථාව තිබේ. 

පාඨමාලා සහ අවශ්‍ය ප්‍රතිපල සඳහා පහත ක්ලික් කරන්න

க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதிகமான மாணவர்கள் இதன் பின்னர் க.பொ.த உயர்தர கற்iகை நெறியினைத் தொடர்வர். அதில் பெரும்பான்மையானவர்களின் இலக்கு பல்கலைக்கழக நுழைவாகும்.

பல்கழைக்ககழக நுழைவின் போது, சில கற்கை நெறிகளுக்கு க.பொ.த உயர்தர பெறுபேறுகளுக்கு அப்பால், க.பொ.த சாதாரண தரத்தில் சில பாடங்களில் குறித்த பெறுபேறுகள் (குறைந்தது) எடுப்பது அவசியமாகும்.
இப்பெறுபேறு, பல்கழைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் பெறப்படல் வேண்டும். 

குறித்த பல்கலைக்கழக கற்கை நெறியை இலக்காகக் கொண்டவர்கள், மேற்படி சாதாரண தர அடைவினைக் கொண்டிராதுவிடின் மீண்டும் அப்பாடங்களுக்கு விண்ணப்பித்து தேவையான பெறுபேறுகளை பெறுவது அவசியமாகும்.

Click Below for the Courses and required Results

Popular

Recent

Ad

Learning Materials for Students