Breaking

Search This Blog

17/09/2020

Cabinet Decisions (16 Sep 2020)

Cabinet Decisions (16 Sep 2020)

 

Cabinet Decisions
16 Sep 2020
කැබිනට් තීරණ
அமைச்சரவை முடிவுகள்

Source : News.lk



01. 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய மதிப்பின் மீது ஏற்பட்ட தாக்கத்தை குறைக்கும் நோக்குடன் இறக்குமதியை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை 2020.04.01 திகதியன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது. அதற்கமைவாக 'சௌபாக்கிய தொலைநோக்கு' என்ற கொள்கைக்கு ஏற்ப தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுதல் மற்றும் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சுங்க வரிகளை தீர்மானிக்கும் குழு நியமிக்கப்பட்டது. அத்தோடு அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இடைக்கால நடவடிக்கை என்ற ரீதியில் இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி பொருட்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி கீழ் கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

• உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல்

• வழங்குபவர்களினால் வழங்கப்படும் கடன் வசதியின் அடிப்படையில் அல்லது வெளிநாட்டு நாணயம் செலவிடப்படாத அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குதல்

• உள்ளுர் கைத்தொழிற்சாலைகள், விவசாயத்துறை, ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் உள்ளுர் நுகர்வுக்கான பொருட்களை இறக்குமதிக்கு அனுமதி வழங்குதல்.

இதற்கமைவாக மேலே குறிப்பிடப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான விதிகளை அறிந்து வெளியிடப்பட்ட 04 விஷேட வர்த்தமானிகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கென சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல்.

2020 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் 04 நாட்களுக்கு இடம்பெற்ற அம்பன் புயலின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 2374 விவசாயிகளின் வாழைத்தோட்டம் மற்றும் பப்பாசி உற்பத்திகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் இதன்போது ஏற்பட்ட மொத்த இழப்பு 52.98 மில்லியன் ரூபா என்ற ரீதியில் யாழ் மாவட்ட செயலாளர்ஃ மாவட்ட அரசாங்க அதிபர்களினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக விவசாய அமைச்சினதும் இடர் முகாமைத்துவ விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சினதும் யாழ் மாவட்ட செயலகத்தினதும் ஒருங்கிணைப்புடனான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கு தேவையான 52.98 மில்லியன் ரூபா நிதியை இடர் முகாமைத்துவ விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சின் ஊடாக மேலதிக மானியம் என்ற ரீதியில் யாழ் மாவட்ட செயலாளர்ஃ மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

03. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 40 இன் கீழான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 40 இன் கீழான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ்கண்ட இலக்கை அடைவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• சுகாதார அமைச்சினதும், முப்படை மற்றும் கொவிட் மத்திய நிலையத்தினதும் கோரிக்கையின் அடிப்படையில் கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையை தடுப்பதற்கு தேவையான மருந்து, இரசாயன பொருட்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், இயந்திர தயாரிப்பு மற்றும் இறக்குமதி செய்யும் போது அல்லது இறக்குமதி செய்து வழங்கும் போது அல்லது இறக்குமதி செய்து நன்கொடையாக வழங்;கும் போது மேல்வரி (செஸ் வரி) செலுத்துவதில் இருந்து விடுவித்தல்.

• போட்லண்ட் சீமெந்து இறக்குமதியின் போது அதற்கான மேல் வரி (செஸ் வரி) விகித அடிப்படையில் குறைப்பதற்கு பதிலாக ஒன்றை சார்ந்த (Tax Base ) அடிப்படையில் அறவிடுதல்.

• Cement blocks களை இறக்குமதி செய்யும் போது செஸ் வரியை நீக்குதல்.

• காலணிகளை தயாரிப்பதற்கு தேவையான சில பாகங்கள், இழை பல்புகள் (Filament Bulbs) மற்றும் எளிதில் வளையக்கூடியதாக பொதியிடும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது செஸ்வரியை விதித்தல்

04. கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்குதல்

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்கள் தற்போது வெளிநாட்டு அச்சக நிறுவனங்களில் அச்சிடப்படுவதினால் நாட்டில் இருந்து வெளியே செல்லும் அந்நிய செலாவணியை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இவ்வாறானவற்றை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிடுவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அது தொடர்பான திட்டம் குறித்து விரிவான வகையில் மதிப்பீடு செய்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் வழங்குவதற்;கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05. கெரவலப்பிட்டியவில் 300 மெஹா வோல்ட் இரண்டாவது ஒன்றிணைக்கப்பட்ட திரவ இயற்கை எரிவாயு (lNG) மின்சார உற்பத்தி நிலையத்தை அமைத்தல்.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடிக்கு தீர்வு என்ற அடிப்படையில் கெரவலப்பிட்டியவில் 300 மெகா வோல்ட் இயற்கை திரவ எரிவாயு (lNG) மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கும், அந்த மின் உற்பத்தி நிலையத்தை இயற்கை எரிசக்தி திட்டமாக தனியார் முதலீட்டின் மூலம்Built Own Operate transfer (Boot)  வர்த்தக முறையின் கீழ் நிர்மாணிப்பதை நடைமுறைப்படுத்து பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, மூன்று வருட காலப்பகுதிக்குள் திட்டத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சர்வதேச போட்டிமிகு பெறுகை செயற்பாடுகளை கடைப்பிடித்து பொருத்தமான முதலீட்டாளரை அடையாளங் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின் சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. அத்தனகலையில் தொழிற்பேட்டை அமைத்தல்

கைத்தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 32 தொழிற்பேட்டைகள் தற்பொழுது நாடு முழுவதிலும் நடத்தப்பட்டு வருவதுடன் தனியார் முதலீட்டாளர்கள் மூலம் சுமார் 36,500 மில்லியன் ரூபா இந்த தொழிற் பேட்டைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொழிற் பேட்டைகளில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் சுமார் 4,517 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றின் மூலம் சுமார் 18,600 தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

மேல் மாகாணத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள சுமார் 150 முதலீட்டாளர்கள் இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்திருந்த போதிலும், இந்த மாகாணத்திற்குள் எட்டு தொழிற் பேட்டைகளில் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. இதனால், கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தொழிற் பேட்டை ஒன்றை அமைப்பதற்கும், இந்த தொழிற் பேட்டையில் மின்சாரம் மற்றும் இலத்திரனியல் பாகங்கள், பொதியிடுவதற்கான பொருட்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்குடன் தொடர்புபட்ட தயாரிப்புகள், ஆடை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகள் மற்றும் மருந்து மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதும், மீள் ஏற்றுமதி மற்றும் ஆய்வு அபிவிருத்தி பணிகளுக்காக உத்தேச தொழிற் பேட்டைக்கான இட வசதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அத்தனகலை மற்றும் வரக்காப்பொல பிரதேச செயலாளர் பிரிவுகள் இரண்டிலும் உள்ள காணியை மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உட்பட்ட 'பெதியாகந்த வத்த' என்ற காணியில் 194 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற் பேட்டையை, பசுமை தொழிற் பேட்டை என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்காக கைத்தொழில்துறை அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரையை கொள்கை ரீதியில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. அத்தோடு இது தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

07. வெலிகம தென்னோலை வாடுதல் மற்றும் அழுகிப்போகும் நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

வெலிகம தென்னோலை வாடுதல் மற்றும் அழுகிப்போகும் நோய் மாத்தறை 12 மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஹம்பாந்தோட்டையில் 6 பிரதேச செயலளார் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ள இந்த நோயின் காரணமாக படிப்படியாக தென்னை மரங்கள் வலுவிழந்து காலம் செல்லும் பொழுது அவை முழுமையாக அழிந்து போவதுடன் நோயற்ற தென்னை மரங்களுக்கு நோய் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நோய் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நோய் பிரதேசங்களுக்கு அப்பால் நோய் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நோய் வலையத்திற்குள் நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு அமைவாக இந்த வேலைத்திட்டத்தை மேலும் 2021 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சினால் சமரப்பிக்கப்பட்ட பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

08. சாட்சிய கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.

சாட்சிய கட்டளைச் சட்டத்தில் சில சொற்கள் மற்றும் பயன்பாடுகள் ( Applications) ) முதலானவை தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை என்பதினால் அவற்றிற்கு பதிலாக புதிய சொற்கள் மற்றும் (Applications) பயன்படுத்தி இந்த கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக, திருத்த சட்ட மூலம் வரைவு பிரிவினர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், இந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. சிறுவர் மற்றும் இளம் நபர்கள் தொடர்பான கட்டனைச் சட்டம் மற்றும் இளம் குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலை) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்

சிறுவர் மற்றும் இளம் நபர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, 14 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என்ற ரீதியில் அர்;த்தப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், இளம் குற்றவாளிகள், பயிற்சி பாடசாலை தொடர்பான கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக 16 – 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்ற ரிதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு குறைந்த சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் மூலம் நல்வழிப்படுத்தும் செயற்பாடுகளுக்காக நன்னடத்தை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் உறுதி செய்யப்பட்ட நன்னடத்தை பாடசாலைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் சிறைச்சாலைகளில் அடைத்தல் அல்லது இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு இருந்த போதிலும் சிறுவர் உரிமை தொடர்பான பிரகடனத்தின் ஒழுங்குவதிகளுக்கு அமைவாக 18 வயதிற்கு குறைந்தவர்களை சிறையில் அடைத்தல், தண்டனை வழங்குதல் போன்றவை மேற்கொள்ள கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் 18 வயதிற்கு குறைந்தவர் சிறுவர் என்ற ரீதியில் அர்த்தப்படுத்துவதற்காக சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும், இதற்கு அமைவாக சிறுவர் என்பவரின் வயது 18 வயது மற்றும் 22 வயதிற்கு உட்பட்ட நபராக அர்த்தப்படுத்துவதற்காகவும் குற்றம் இழைத்தவர்கள் (பயிற்சி பாடசாலை) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பிரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

10. ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தக்கூடிய வயதை 16 ஆக அதிகரிப்பதற்காக தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்.

16 வயது வரையிலான கட்டாய பாடசாலை கல்வி என்ற ரீதியிலான சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வகையில் தொழில் கட்டளைச் சட்;டத்தில் ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தும் ஆக குறைந்த வயது 16 ஆக அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தொழில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக 2020 ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக கீழ் கண்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்ட மூலம் திருத்த சட்ட வரைபு பிரிவினால் வகுக்கப்பட்டுள்ளது.

• 1954 ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான (129 ஆவது அதிகாரம்) வர்த்தக நிலையங்கள்(சாப்பு) மற்றும் பணியக ஊழியர்கள் தொடர்பான தொழில் மற்றும் வேதனத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம்.

• 1956 ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் சட்டம்

• (135 அதிகாரம்) ஆக குறைந்த வேதனம் (இந்திய தொழிலாளர்கள்) கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம்

• 1942 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்

• 1958 இம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய 1958.10.31 ஆம் திகதி அன்று இலக்கம் 11573 என்ற அரச அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவு

இதற்கு இமைவாக இதன் திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், 1958 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வெளியிடப்பட்ட உத்தரவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்ககப்பட்டுள்ளது.

11. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக பெரா சிகிச்சை(கிளினிக்) கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக பெரா சிகிச்சை கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்டு நிர்மாண பணிகளை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் அடிப்படையில் தேசிய போட்டித் தன்மையான கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திற்காக பெரா-சிகிச்சை (கிளினிக்) கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 1013.87 மில்லியன் ரூபாவுக்கும் இதற்காக பெறுமதி சேர்க்கப்பட்ட அடிப்படையிலான வரி (VAT) உடனான தொகைக்கு மஹா இன்ஞினியரிங் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


12.இரசாயன உரத்தை கொள்வனவு செய்தல் - 2020 ஆம் ஆண்டு பெரும்போகம் – அக்டோபர் மாதம

2020 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் தேவையான இரசாயன உரத்தை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச பகிரங்க போட்டித் தன்மையுடனான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக 60,000 மெற்றிக் தொன் யூரியாவை( கிரனி யூலர்) அமைச்சரவையினால் நியமிக்கப்;பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 180 நாள் கடன் கால எல்லைப்பகுதிக்கு உட்பட்டதாக ஒரு மெற்றிக் தொன் 298.34 அமெரிக்க டொலர் என்ற ரீதியில் எக்றிபேர்ட் லைவ் வன் இன்டர்நெஷனல் லிமிட்டட் என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. 2020.10.01 தொடக்கம் 2021.05.31 வரையிலான 8 மாத (08) காலத்திற்காக மர்பன் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தம்

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2020.10.01 தொடக்கம் 2021.05.31 ஆம் திகதி வரையிலான எட்டு மாத (08) காலத்திற்காக 8,400,000+/- 5% மர்பன் மசகு எண்ணெய் பீப்பாய்களை கொள்வனவு செய்யும் நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூரில் உள்ள M/s Emirates National Oil Company ( ENOC) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்

கீழ் கண்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கை கட்டமைப்பை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.

• சௌபாக்கிய தொலைநோக்கு அரசாங்கத்தின் கொள்கை அறிவிப்பின் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ள பெறுபேறுகளை அடைவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

• அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு விடயதானங்கள் வழங்கப்பட்டமைக்கு அமைவாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட வகையில் சம்பந்தப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்கு தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

• அனைவருக்கும் குடி நீரை வழங்குதல், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 100,000 கிலோ மீற்றர் வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீர்வள மற்றும் நீர்ப்பாசன துறைகளுக்காக முக்கியத்துவம் வழங்குதல்.

• அரசாங்கத்தின் வருமானம் 2021 ஆம் ஆண்டிற்குள் தேசிய உற்பத்தியில் 10.2 சதவீதமாக அமையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த நிலைமையின் கீழ் செலவை முகாமைத்துவம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்து வர்த்தக நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி அரச முதலீட்டு வேலைத்திட்டத்திற்காக வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

• அரசாங்க பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்.

• குறைந்த வளங்களை பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தற்பொழுதுள்ள நடைமுறைகளை மதிப்பீடு செய்து பரந்துபட்;ட நடைமுறையில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.

இதற்கு அமைவாக, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட கொள்கையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்;கப்பட்டுள்ளது.

15. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்ட தொடரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்ட தொடர் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி சுவிஸ்லாந்தில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது. அத்தோடு இந்த கூட்;டத் தொடரில் ' உலகளாவிய மனித உரிமைகளை பூரணப்படுத்தல் ' என்ற தொனிப்பொருளின் கீழ் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினாலும் இலங்கை தொடர்பாக 30 / 1 பிரேரணையின் முக்கிய குழுவிற்காக பிரிட்டனினால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்;ட அறிவிப்பு குறித்தும், அந்த அறிவிப்பின் மூலம் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும் இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி சமர்ப்பிக்கப்பட்ட பதில் தொடர்பாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்பட்டதுடன் இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

Popular

Recent

Ad

Learning Materials for Students